Wednesday, December 31, 2008

பிரிவு

உன்னை விட்டு பிரிந்த பொது
உணர்ந்தேன் -
உன் மீது எனக்கிருந்த
காதலை !!!

Tuesday, September 30, 2008

இரவு

சுட்டெரிக்கும் சூரியனுக்கும்
உழைத்து களைத்தவர்களுக்கும்
இது ஓய்வு நேரம் !!
தூங்கிய நிலவு
நம்மை
தூங்க வைக்க
உலா வரும் நேரம் !!
மறைந்திருந்த நக்ஷத்திரங்கள்
மினுமினுக்க
விண்ணில் உதிக்கும் நேரம் !!
காத்திருந்த காதலர்கள்
தழுவிக்கொள்ள
இது சிறந்த நேரம் !
ஓசைகளும் அனைத்தும்
அடங்கி
தாலாட்டு மட்டும் கேட்க்கும் நேரம் !!

உயிர்கள் உறங்கும் நேரம் !!
இதயங்கள் இணையும் நேரம் !!
நிலவு உலவும் நேரம் !!
இது இரவு நேரம் !!!!

Sunday, September 28, 2008

மாலை நேர சூரியன் !!

ஆயிரம் ஆயிரம் கரங்கள் கொண்டு,
உலகுக்கெல்லாம் ஒளி தந்து ,
சுட்டெரிக்கும் வெப்பம் தந்து ,
எவரும் எட்ட முடியாத ,
அல்ல அல்ல
எவரும் காண முடியாத படி -
உல்லாசமாய் வலம் வருவாய் !!

இப்பொழுது நீ உண்டு ,
உன் கரங்கள் இல்லை !
ஒளி உண்டு
சுட்டெரிக்கும் வெப்பம் இல்லை !!
தொட முடியாவிடினும்
கண்குளிர காண முடியும் !!!
இப்படியே என்றும் நீ இருக்க
ஏங்குகின்றது என் மனம் !
இப்படியே நீ நின்று விட
ஏங்குகின்றன என் கண்கள் !!

உன் வெப்பத்தை குறைத்து
சிகப்பு நிறம் கொண்டு ,
விண்ணில் ஓர் சிகப்பு தாமரையாய்
நிற்கின்றாய் !! ரசிக்கின்றேன் !!!

Friday, September 26, 2008

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - IHM

ஆயிரம் ஆயிரம் தோழிகள் உண்டு
உன்னை வாழ்த்த !
அதில் ஒன்றை இங்கு வந்தேன்
ஏன் எண்ணம் சொல்ல !!

பிறந்த நாட்டை பிரிந்த சோகம் உண்டு
உன்னை காணும் வரை !
தோழிகள் இல்லை என்றொரு ஏக்கம் உண்டு
உன்னை காணும் வரை !!
தனிமை என்றொரு எண்ணம் வாடியதுண்டு
உன்னை காணும் வரை !!!

ஒளிந்திருக்கும் திறமையை
வெளிக்கொண்டு வந்தாய் !
எங்கோ இருந்க்கும் மக்களை
ஓரிடத்தில் தந்தாய் !!
மனதிலிருக்கும் சுமையை
இறக்க இடம் தந்தாய் !!!
எவ்வித குழப்பத்திற்கும்
நொடியில் பதில் தந்தாய் !!!

ஒரு வயது குழந்தை நீ !
உன்னை பெற்றவள் ஒருத்தி ,
காப்பவர்கள் ஐந்து பேர் ,
வளர்ப்பவர்களோ ஆயிரம் ஆயிரம் பேர் !!
அனைவரின் ஆதரவில் செம்மையாக வளர்க நீ !!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!

Monday, September 8, 2008

உன்னோடு !!!

கொட்டும் மழையில்
உன்னோடு ஓர் குடையில்
நடப்பதும் சுகமே !
அத்துணை துன்பத்திலும்
நீ தரும் ஆறுதல் வார்த்தையை
கேட்பதும் சுகமே !
ஆயிரம் குழப்பத்திலும்
உன்னுடன் இருக்கும்
அமைதியும் சுகமே !
எத்துனை வயதானாலும்
உன்னோடு செய்யும்
குறும்பும் சுகமே !
உன்னோடு வாழ்ந்தால்
இம்மண்ணும் ச்வர்கமே !

Friday, June 27, 2008

பெண்ணை உன் பரிமாணம்

நீ மகளாய் இருக்கும் பொழுது ---

உன் தாய் உன்னை
முழுதாய் புரிந்தவளென்பதை
மறக்காதே !
இதை புரிந்து கொள்ள
நீ தாயகும்வரை
காத்திருக்காதே!!

நீ காதலியாய் இருக்கும் பொழுது --

அவனிடம் கொண்ட
நட்பை மாற்றாதே !
விட்டுக்கொடுத்து போக
மறக்காதே !!

நீ மனைவியாய் இருக்கும் பொழுது --

உன் காதலை மறக்காதே !
அப்போது விட்டுக்கொடுத்ததை
இப்போது பிடிக்க எண்ணாதே !!
அவனை மட்டும் விரும்பியது
போதும் !
அவன் சுற்றத்தை விரும்ப
கற்றுகொள் !!
உன்னை போல் அவனுக்கும்
அவன் தாய் தான்
தெய்வம் என்பதை மறக்காதே !!!

நீ நாத்தனாரை இருக்கும் பொழுது ---

நீ உன் புகுந்த வீட்டில்
பெற்ற இன்னல்களை
உன் வீட்டில் வந்தவள்
அனுபவிப்பாள் !
இதை மறக்காதே !!
உன் தாய் அவளுக்கு
மாமியார் !
உன் மாமியார் உனக்கு செய்ததை
உன் தாய் அவளுக்கு செய்வாள் !
இதை ஒப்புகொள்ளவிடினும்
உணர கற்றுக்கொள் !!

நீ மாமியாராய் இருக்கும் பொழுது --

உன் மருமகள்
உன் மகனை எடுத்து செல்ல வரவில்லை !
அவனுடன் கலக்க வந்தவள் !!
உன் மகளின் மாற்றத்தை
முன்னேற்றம் என்று சொல்லும் நீ
உன் மருமகளின் மாற்றத்தை
திமிரேற்றம் என்று சொல்லாதே !!!

நீ பாட்டியாகும் பொழுது --

உன் பேரக்குழந்தைகளை
பார்த்து ரசி !!
அவர்களை தாலாட்ட எண்ணாதே !
அது பெற்றவளின் உரிமை !
அதை பறிக்க எண்ணாதே !!
அவர்களை வாழ்த்து !
வளர்க்க எண்ணாதே !!

இன்பமாய் இருக்க ஆயிரம் வழி உண்டு !
நீ வாழ இன்னொருத்தி கண்ணீர் வேண்டுமா ??

எது என் வீடு

என் தோழியிடம் சொன்னேன்
" என் வீட்டுக்கு நீயும் வா " என்று !
என் தாய் சொன்னாள்
" நம் வீட்டு கதவை பூட்டு " என்று !

திருமணத்திற்கு முதல் நாள்
என் தாய் சொன்னாள்
" நம் வீட்டு சாவி பத்திரம் " என்று !!

திருமணத்திற்கு பிறகு -----

புகுந்த வீட்டில்
கணவன கேட்டான்
" உன் வீட்டில் உன் அம்மா நலமா ? " என்று !

பிறந்த வீட்டில்
தாய் கேட்டாள்
" உன் வீட்டில் உன் கணவன் நலமா ? " என்று !!

நான் இருவரிடமும் கேட்டேன்
" இப்பொழுது எது என் வீடு என்று "

Wednesday, May 21, 2008

கடல்

உன் எல்லை
காணமுடியாது !
உன் அலைகளை
எண்ணமுடியாது !!
உன் ஆழம்
அறியமுடியாது !!!

அளவில்லா மீன்களின்
இருப்பிடம் நீ !
எண்ணற்ற மக்களின்
அன்னை நீ !!
கணக்கில்லா கப்பல்களின்
நம்பிக்கை நீ !!!

இந்த நம்பிக்கை
உடையலமா ?
அன்னை பிள்ளையை
துரக்கலாமா ?
உன் கரையை நீ
கடக்கலாமா ?

Friday, May 2, 2008

வாழ்வின் சிறந்த நொடி

மௌனமாய் அமர்ந்திருந்தேன்
தனிமையை துணையாய் கொண்டு !

மின்னலாய் வந்தான் ஒருவன் ---
*** கையில் மலர் சண்டுடன்
***முகத்தில் புன்னகையுடன்
***மனதில் காதலனுடன் !!

அந்த நொடி ---
*** தனிமை அகன்றது
***மௌனம் கலைந்தது
***காதல் மலர்ந்தது !!

அவனிடம் ---
***தாயின் பாசம் கண்டேன்
***தந்தையின் கனிவு கண்டேன்
***தமையனின் துணை கண்டேன்
***தோழியின் நட்பு கண்டேன்
***புதியதாய் காதல் கண்டேன்!!

இன்றும் மறவாத நொடி அது !
என்றும் மறக்க இயலாத நொடி அது!!
அனைவரும் கடக்கும் நொடி அது !
என் வாழ்வின் சிறந்த நொடி அது !!

Friday, April 18, 2008

வந்தது வசந்தம் !!!


வாடிய செடி கொடிகளை
துளிர்க்க சொல்ல
வந்தது வசந்தம் !!!
பூக்க மறந்த மரங்களை
மலர சொல்ல
வந்தது வசந்தம் !!!
மண்ணில் புதைந்த புற்களை
துளிர்க்க சொல்ல
வந்தது வசந்தம் !!!
கூட்டில் இருந்த பறவைகளை
பறக்க சொல்ல
வந்தது வசந்தம் !!!
அவை இன்று பாடும் கீதம்
" வந்தது வசந்தம் !"

Saturday, April 5, 2008

கண்ணீர்


ஊமையாய் இருக்கும் இதயத்தின்
வார்த்தைகளை சொல்லும் மொழி !
ஓராயிரம் சொற்கள் சொல்லமுடியாததை
நொடியில் சொல்லும் ஒரு துளி !!

Friday, April 4, 2008

மலர்


மனம் வீசும் மலரே .............

நொடி பொழுதில் மலர்ந்தாய்
கண் கவரும் வண்ணம் கொண்டு !
உன்னை கடப்பவரை கவர்ந்தாய்
மனம் மயக்கும் மணம் கொண்டு !!
யார் தந்த வாரம் உனக்கிது ??

தாய் உன்னை -
கூந்தலில் சூடினாள் ,
அழகு பார்த்தாள் ,
கண்கொட்டாமல் ரசித்தாள் ,
மணம் மகிழ்ந்தாள் !
தாய் தந்த சீதனம் நீ !!
அவளின் அழியாத நினைவு சின்னம் நீ!!!

Wednesday, April 2, 2008

மழைத்துளி

வெளியே வந்துவிட்டேன்
இனி என்ன செய்வேன் !!!

சுகமாய் இருந்தேன்
என்
தாய் மடியில் !
வெளியே வந்துவிட்டேன்
ஒரு
நொடி பொழுதில் !!

இனி என்ன செய்வேன் ?????

தாமரை இலையில் வாழ்வேனோ ?
மண்ணில் வீழ்ந்து இறப்பேனோ ?
ஓயாத கடலில் கலப்பேனோ ?
எரியும் நெருப்பென்னை விழுங்குமோ ?

இனி என்ன செய்வேன் ?????

சில்லென்ற காற்று
மெதுவாய் அடிகின்றது !
என்னை எங்கோ
கொண்டு செல்கின்றது !!

இனி என்ன செய்வேன் ?????

திறந்திருந்த சிப்பியில் விழுந்தேன் !
என் பயம் விலகியது !!
விலையுயர்ந்த முத்தை மாறினேன் !
நன்றி இறைவா !!

இளைஞனே ---
வீடு விட்டு வெளியில் வா !
பயத்தை விலக்கி
உன்னை உயர்த்து !!
நம்பிக்கை காற்றடிக்கும்
வெற்றி உனக்கே!!!

Monday, March 31, 2008

இலை உதிர் காலம் -- 2

துளிர்விடும் போது
பச்சைபசேலென
கண்ணுக்கு விருந்தளித்தாய் !

வாழும் போது
கம்பீரமாய் நின்று
இளைப்பாற நிழல் கொடுத்தாய் !!

வாடும் போதும்
வண்ணவண்ண இலைகளால்
மனதிற்கு சுகம்தருகிறாய் !!!

இதுபோல் வாழ ஓர்
வரம் தா இறைவா !!!!

Wednesday, March 26, 2008

காதல்



நீ கிசுகிசுத்தது என்
காதுகளில் அல்ல !
இதயத்தில் !!
நீ முத்தமிட்டது என்
இதழ்களில் அல்ல !
உணர்வில் !!
நீ பிரிந்தது என்
உடலை அல்ல
உயிரை !!!

ரசிகன்

குழந்தை சிரிக்கும்போதும்
மழலை கேட்கும்போதும்
தென்றல் வீசும்போதும்
மொட்டு மலரும்போதும்
குமரி கடக்கும்போதும்
அலை அடிக்கும்போதும்
உன்னை மறந்தால்
நீயும் கவிஞனே !!!

Tuesday, March 18, 2008

இலை உதிர் காலம்


பச்சை பசேல்லென
கண்ணுக்கு குளுமயளித்தாய்
கண் கொட்டாமல் ரசித்தேன் !!
மனம் வீசும் மலர்களால்
கூந்தலை அலங்கரித்தாய்
பெருமிதம் கொண்டேன்!!
சுவை மிகுந்த பழத்தால்
நாவிற்கு விருந்தளித்தாய்
சுவைத்து உண்டேன் !!
வண்ண வண்ண இலைகளால்
மனதை மகிழ்வித்தாய்
உன் வாட்டம் புரியாமல் மகிழ்ந்தேன் !!
உதிரும் பொழுதும்
இன்பம் தருகிறாயே
உன்னை எண்ணி நெகிழ்கிறேன் !!
என் உளமார வாழ்த்துகிறேன் !!

கவிஞன்

சில்லென வீசும் காற்றுக்கும்
ஓயாத கடல் அலைக்கும்
மேகங்கள் படர்ந்திருக்கும் விண்ணுக்கும்
காடுகள் அடர்ந்திருக்கும் மண்ணுக்கும்
உண்டு எல்லை !!
கவிஞனே உன் எண்ணத்திற்கு என்றும்
இல்லை எல்லை !!

Monday, March 17, 2008

இதயம்


மலருக்காக வண்டு துடிக்க
மழைக்காக மண் துடிக்க
கண்ணுக்காக இமை துடிக்க
கண்ணனுக்காக மீரா துடிக்க
எனக்காக நீயோ என்றும் துடிக்க !!

Friday, March 14, 2008

நீயும் நானும்

வானமும் மேகமுமாய்
நீயும் நானும்
இருப்போம் ஏன்ற கவிதையை
அழித்துவிட்டேன் !!
இரண்டுக்கும் இடையில்
நீயும் நானும்
விமானத்தில் சென்ற
நொடியில் !!