Friday, June 27, 2008

பெண்ணை உன் பரிமாணம்

நீ மகளாய் இருக்கும் பொழுது ---

உன் தாய் உன்னை
முழுதாய் புரிந்தவளென்பதை
மறக்காதே !
இதை புரிந்து கொள்ள
நீ தாயகும்வரை
காத்திருக்காதே!!

நீ காதலியாய் இருக்கும் பொழுது --

அவனிடம் கொண்ட
நட்பை மாற்றாதே !
விட்டுக்கொடுத்து போக
மறக்காதே !!

நீ மனைவியாய் இருக்கும் பொழுது --

உன் காதலை மறக்காதே !
அப்போது விட்டுக்கொடுத்ததை
இப்போது பிடிக்க எண்ணாதே !!
அவனை மட்டும் விரும்பியது
போதும் !
அவன் சுற்றத்தை விரும்ப
கற்றுகொள் !!
உன்னை போல் அவனுக்கும்
அவன் தாய் தான்
தெய்வம் என்பதை மறக்காதே !!!

நீ நாத்தனாரை இருக்கும் பொழுது ---

நீ உன் புகுந்த வீட்டில்
பெற்ற இன்னல்களை
உன் வீட்டில் வந்தவள்
அனுபவிப்பாள் !
இதை மறக்காதே !!
உன் தாய் அவளுக்கு
மாமியார் !
உன் மாமியார் உனக்கு செய்ததை
உன் தாய் அவளுக்கு செய்வாள் !
இதை ஒப்புகொள்ளவிடினும்
உணர கற்றுக்கொள் !!

நீ மாமியாராய் இருக்கும் பொழுது --

உன் மருமகள்
உன் மகனை எடுத்து செல்ல வரவில்லை !
அவனுடன் கலக்க வந்தவள் !!
உன் மகளின் மாற்றத்தை
முன்னேற்றம் என்று சொல்லும் நீ
உன் மருமகளின் மாற்றத்தை
திமிரேற்றம் என்று சொல்லாதே !!!

நீ பாட்டியாகும் பொழுது --

உன் பேரக்குழந்தைகளை
பார்த்து ரசி !!
அவர்களை தாலாட்ட எண்ணாதே !
அது பெற்றவளின் உரிமை !
அதை பறிக்க எண்ணாதே !!
அவர்களை வாழ்த்து !
வளர்க்க எண்ணாதே !!

இன்பமாய் இருக்க ஆயிரம் வழி உண்டு !
நீ வாழ இன்னொருத்தி கண்ணீர் வேண்டுமா ??

எது என் வீடு

என் தோழியிடம் சொன்னேன்
" என் வீட்டுக்கு நீயும் வா " என்று !
என் தாய் சொன்னாள்
" நம் வீட்டு கதவை பூட்டு " என்று !

திருமணத்திற்கு முதல் நாள்
என் தாய் சொன்னாள்
" நம் வீட்டு சாவி பத்திரம் " என்று !!

திருமணத்திற்கு பிறகு -----

புகுந்த வீட்டில்
கணவன கேட்டான்
" உன் வீட்டில் உன் அம்மா நலமா ? " என்று !

பிறந்த வீட்டில்
தாய் கேட்டாள்
" உன் வீட்டில் உன் கணவன் நலமா ? " என்று !!

நான் இருவரிடமும் கேட்டேன்
" இப்பொழுது எது என் வீடு என்று "