பச்சை பசேல்லென கண்ணுக்கு குளுமயளித்தாய் கண் கொட்டாமல் ரசித்தேன் !! மனம் வீசும் மலர்களால் கூந்தலை அலங்கரித்தாய் பெருமிதம் கொண்டேன்!! சுவை மிகுந்த பழத்தால் நாவிற்கு விருந்தளித்தாய் சுவைத்து உண்டேன் !! வண்ண வண்ண இலைகளால் மனதை மகிழ்வித்தாய் உன் வாட்டம் புரியாமல் மகிழ்ந்தேன் !! உதிரும் பொழுதும் இன்பம் தருகிறாயே உன்னை எண்ணி நெகிழ்கிறேன் !! என் உளமார வாழ்த்துகிறேன் !!
சில்லென வீசும் காற்றுக்கும் ஓயாத கடல் அலைக்கும் மேகங்கள் படர்ந்திருக்கும் விண்ணுக்கும் காடுகள் அடர்ந்திருக்கும் மண்ணுக்கும் உண்டு எல்லை !! கவிஞனே உன் எண்ணத்திற்கு என்றும் இல்லை எல்லை !!